தெஹ்ரான்: கடந்த, 2018ம் ஆண்டு, ஈரான் மீது அமெரிக்கா, பொருளாதாரத் தடையை விதித்தது. ஏற்கனவே, பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த ஈரான், அமெரிக்கா விதித்த தடையால் மிகவும் பாதிக்கப்பட்டது.இந்நிலையில், ஆசிய நாடுகளில், சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ள நாடாக ஈரான் மாறியுள்ளது. இதுவரை அங்கு, 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். 47,593 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி போதுமான மருத்துவச் சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி, 'போதுமான மருத்துவ உபகரணங்கள் இன்றி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. இருந்தும் அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி, கொரோனாவைச் சிறப்பாக எதிர்கொண்டு வருகிறோம்' எனத் தெரிவித்திருந்தார்.