திருவனந்தபுரம்: கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கால் மது கிடைக்காதவர்கள் மருத்துவரிடம் அனுமதி பெற்று வந்தால், அவர்களுக்கு மது வீடி தேடி வரும் என கேரள அரசு உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கால் கேரளாவில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளது. மது கிடைக்காத குடிமகன்கள் 5 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து பிரச்னையை சமாளிக்க, மதுவுக்கு அடிமையானவர்கள், மருத்துவரின் அனுமதி பெற்று வந்தால், வீடு தேடி சென்று 3 லிட்டர் மது கொடுக்கலாம் கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்தார்
வீடு தேடி மது : கேரள அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை