'தீய சிந்தனைகொண்ட எதிரி'
கடந்த பிப்., மாதம், கொரோனாவைக் கட்டுப்படுத்த ஈரானுக்கு அமெரிக்கா உதவ முன்வந்தது. ஆனால், 'அமெரிக்காவிடமிருந்து எந்த உதவியையும் பெற மாட்டோம். தடையை விதித்துவிட்டு உதவி செய்வதாகக்கூறுவது விசித்திரமாகவுள்ளது. அமெரிக்கா தீய சிந்தனைகொண்ட எதிரி' என, ஈரான் அரசு தெரிவித்தது.
ஆனாலும், ஈரானிலிருந்து வரும் கொரோனா குறித்தான தகவல்கள், அமெரிக்காவின் தடையையும் மீறி, உலக நாடுகளை ஈரானுக்கு உதவிக்கரம் நீட்டச் செய்திருக்கின்றன.