முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்தது என்ன

புதுடில்லி : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஏப்.,14 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: மாநில முதல்வர்களுடனான ஆலோசனையின் போது, பிரதமர் மோடி, கொரோனா பரிசோதனை, தொற்று உள்ளவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்துதல், மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தல் ஆகியவை அடுத்த சில வாரங்களுக்கு மிகவும் முக்கியமானவை. எனவே மாநில அரசுகள் அதில், கவனம் செலுத்த வேண்டும். கொரோனா பரவாமல் தடுப்பதற்கு இந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியமானவை. அதுபோல, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மக்களுக்கான அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மக்களுக்கான அத்யாவசிய பொருட்களின் கையிருப்பை கவனித்து கொள்வது அவசியம். ஊரடங்கு முடிந்த பின்னர், குறிப்பிடத்தக்க பாதுகாப்பு வழிமுறைகள் எடுக்கப்பட வேண்டும். ஊரடங்கை மாநில அரசுகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் எனக்கூறினார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.